இறைவன் சகாயம் செய்யட்டும்

கொஞ்சம் எதிர்த்து கொள்கை காத்தால்
கொடுஞ்சினம் மாளாதே

வஞ்சம் வகுத்து வாழ்வைக் குலைப்பார்
வலியும் தீராதே!

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி
வாழும் ஏந்தலே!

பஞ்சும் பட்டும் கொஞ்சிடும் சரகம்
நின்துணை நீங்கியதோ?

எத்துணை மாற்றல் எத்துணை ஆற்றல்
எப்படி சாத்தியமோ?

பித்தர்கள் சேட்டை பின்னரும் தொடர,
பெருங்கடல் ஓய்ந்திடுமோ?.

எத்தரும் ஏத்தும் இறுகிய நேர்மை
இமயம் தோற்கிறதே;

இத்தகு ஆளை எழுத்தில் எடுக்க
இதயம் பார்க்கிறதே!

வாழ்க்கைத் துணையார் நலனை நாடி
வாடும் நன்னெஞ்சே!

காக்கும் கடவுளை கையால் தொழுதோம்
உன்னுடன் நாங்களுமே.

நோக்கும் திசையில் நீ வரும் நேரம்
உனக்கும் முன்சென்று

ஆக்கமும் ஊக்கமும் அளித்துனைக் காப்பான்
ஐயா கலங்காதே!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (7-Sep-14, 10:23 am)
பார்வை : 92

மேலே