காகித பூக்கள்
கடந்துவிட்ட
தூரங்கள் அறியாது
ஓடிகொண்டிருக்கிறது என்
எழுதுகோல்..
முற்றுபுள்ளியினை தேடியபடி..!
வீழ்ந்து கொண்டிருக்கும்
வார்த்தைகள் ஓவ்வொன்றிலும்
ஒளிந்துகொண்டிருக்கின்றன
நம் காதலுக்கான விதைகள்..!
நிரப்பபடாத பக்கங்கள்
சொல்லபடாத ரகசியங்களுக்காக
காத்துகொண்டிருகின்றன
காற்றினை நிரப்பிக்கொண்டு..!
கடிதம் கை சேரும்வரை
என்னை போலவே,
காத்திருக்கிறது
உன் விழிப்பார்வையில் பிறப்பெடுக்க..
உனக்கான
எனது வாழ்க்கையும்;
எழுதப்பட்ட வார்த்தைகளும்...!!

