வங்கியும் நீயும் - இராஜ்குமார்

வங்கியும் நீயும்
===============

வட்டி கேட்கும் வங்கி
தவறவில்லை தவணையை

சுற்றி திரியும் உன்விழியை
பார்க்கவில்லை தவணையில்

**********************************************************
முறைத்து முழுங்கும் அதிகாரியை
பார்க்க வேண்டும் பலமுறை

திட்டி முடிக்கும் உன்சொல்லை
கேட்கவில்லை ஒருமுறை

************************************************************

படிக்க பணம் வழங்கும்
அதிகாரிக்கு அக்கறை பணத்தில்

பார்க்கும் மனதை விழுங்கும்
உன்விழிக்கு திறமை எதனில் ?

**********************************************************************

ஆண்டிற்கு அடிக்கடி
அலையவைக்கும் அன்பில்
மேல்சட்டை மேலதிகாரி

நாட்களின் நொடிக்குநொடி
சுற்றவைக்கும் திமிரில்
தாவணி தண்டனைகாரி

*************************************************************************
வங்கியும் நீயும்
வட்டியில் என்னை வாட்ட

பணமும் குணமும்
மனதினில் எனதை மீட்டிடும்..??


- இராஜ்குமார்

நாள் : 24 - 5 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Sep-14, 9:24 am)
பார்வை : 75

மேலே