சூரியனை காதலிப்போம்

நிலவை ரசிக்கும் பலர்
ஏன் சூரியனை ரசிக்க
மறக்கின்றனர்
நிலவுக்கு கவி எழுதும் பலர்
ஏன் சூரியனுக்கு கவி எழுத
மறக்கின்றனர்
இது மறப்பதா ? இல்லை
மறுப்பதா ?

நிலவை விட சூரியனுக்கு
என்ன குறைச்சல் ?
ஆண்ட வெளியிற்கு அவன்
தானே அரசன்
அந்த அரசனுக்கு நிலா தானே
அரசி
அப்படிப் பார்க்கையில் அந்த
நிலா இரண்டாம் பட்சம் தானே

நிலவை விட அழகில் சூரியனுக்கு
என்ன குறைச்சல் ?
அவனும் அழகன் தான்
அவனது பொன்மஞ்சள் முகம்
யாருக்குண்டு ?
அவனின் சுடும் கதிர்களை
கொஞ்சம் ரசித்துப் பார்த்தால்
அதுவும் ஒரு இதமான சுடல் தான்

அண்டவெளியில் நிலவின்
காதலன் சூரியன் என்றால்
பூமியில் அவனுக்கு காதலிகளா
இல்லை !

காலையில் அவன் பொன்முகம்
காட்டுகையில் , அவன்
முகம் பார்த்து பூப்படையும்
தாமரைகள் காதலிகளில்லையா?
பகலில் அவன் மஞ்சள் முகம்
பார்த்து புன்னகைக்கும்
சூரியகாந்தி காதலியில்லையா?
மாலையில் அவன் வரையும்
வண்ணங்களை கண்டு மயங்கும்
மனிதர்கள் காதலர்களிலையா ?
இரவில் அவன் சக்தி பெற்று
ஒளிரும் நிலவும் அவன்
காதலியில்லையா ?

இயற்கையே அவன் காதலை
பெற கவி எழுதுகையில்
நாம் அவன் சுதந்திர அடிமைகளைப்
பற்றி மட்டும் கவி எழுதுவதில்
என்ன நியாயம்
நாமும் கவி எழுதி அவன்
காதலை பெற முயற்சிப்பதில்
என்ன அநியாயம்

எழுதியவர் : fasrina (13-Sep-14, 10:40 am)
பார்வை : 105

மேலே