+டா டா டா டா டா டா+

ஆடுடா பாடுடா
ஆட்டமும் பாட்டமும்
போக்கிடும் உனக்குள்ள மனத்தளர்ச்சி!

சிரியடா உதவடா
சிந்தனை மாற்றடா
பொங்கிடும் உனக்குள்ளே புத்துணர்ச்சி!

சுற்றமும் சூழலும்
சுத்தமாய் வையடா
சுகங்களே கொடுத்திடும் முகமலர்ச்சி!

நட்புடன் நல்லோரை
நாளும்நீ நேசிடா
நன்மையில் முடிந்திடும் உன்முயற்சி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Sep-14, 7:27 am)
பார்வை : 1223

மேலே