மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
யாருமில்லா மதியத்தில்
அடிகுழாயின் ஓசை..
ஓடி வந்து பார்த்தால்
நீயில்லை.!
இன்று அந்த அடிகுழாய் இல்லை.!!
புரட்டாசி பஜனைகளில்
பின்பாட்டுகள் நடுவில்...
"கண்ணன் வந்தான் "
பாடப் பணிவாய்.!
இன்று அந்த பஜனைகள் இல்லை.!!
தேர் இழுத்து திரும்புகையில்
கலர் , பன்னீர்சோடாவை...
பாதி குடித்து
மாற்றிக்கொள்வோம்.!
இன்று அந்த பன்னீர்சோடா இல்லை.!!
காதல்புரிந்த பேருந்தில்
புரிந்தகாதல் பயணம்...
புரியவைத்த
பல்லவனும் இல்லை.!
பட்டுக்கோட்டை அழகிரியும் இல்லை.!!
ஆகமொத்தத்தில் .....
செந்தாழம்பூவில்
வந்தாடும் தென்றல்
வரிகளின் வடிவங்களில்
நாகரிகமாய் காதல்
நடந்து கொண்டிருந்தது.!
இன்றும் கூட...
அடிகுழாய் , பஜனைகள்
பல்லவன் , பன்னீர்சோடா
இல்லா இடங்களிலும்
காதல்
நடந்து கொண்டுதானிருக்கிறது.!
ஆனால் அந்த நா.............. இ.......... .!!