நினைவுகளில் கரையும் காலங்கள்
கனவாகிப் போன நிஜங்களில்
மறையும்-
நிகழ்காலத்தின் நிழல்கள்!
வடுவாகிப் போன சொற்களில்
தடுமாறும்-
வருகின்ற வார்த்தைகள்!
செய்வது யாதென அறியாது-
பேதலிக்கும் மனம்!
மனசுக்குள்ளிருந்து
மௌனமாய்த் தடுமாறி
திணறித் துடித்து-
கண்களில் கரையும்
கனவுகள்!
-கணந்தோறும்
நினைவுகளில் கரையும்
காலங்கள்!
16.08.2002