எனக்குப் பிடித்தது

நான் விரும்பி நேசித்த நட்புக்காக
நான் விரும்பி செய்த செயல்களை - மறந்து
உதாசீனப்படுத்தும் போது
இமையோரம் வரும் கண்ணீர் துளிகள்
எனக்கு மிகவும் பிடிக்கும்

உதாசீனப்படுத்திய நட்பு - மறந்து
திரும்ப வந்து உறவாடும் போது
இதயத்தில் வரும் பூரிப்பும்
எனக்கு மிகவும் பிடிக்கும்

காரணம் உண்மையான அன்பு நட்பின் பக்கம்

எழுதியவர் : (25-Mar-11, 4:34 pm)
சேர்த்தது : Naliny
பார்வை : 720

மேலே