நட்பு

வருடங்கள் நொடிகளாய் கடந்துவிட்டன!
பழகிய தருணங்கள் பனித்துளியாய் கரைந்துவிட்டன!!
இதயத்தில் நினைவுகள் மட்டும் இமையமாய்...!!!
இப்-பொழுது, எப்பொழுதும் இனி அமையாது!
வருடமொருமுறை நம் வயது எறினாலும்,
நம் நட்பு மட்டும் என்றும் இளமையாய்..,
எனை காக்கும் இமையாய்...!
தொடுதூரத்தில் இல்லை என்றாலும்- நாம் என்றும்
தொடர்பிலிருப்போம் என்ற நம்பிக்கையோடு
பிரிவிற்கே நாம் பிரிவு கொடுப்போம்...!
வருகிற வருடங்கள் வசந்தமாய் அமைய
நண்பனின் வாழ்த்துகள்.......