இந்நாளில் ஒரு ஏக்கம்

காலை பனி பலருக்கு
கவிதையை வரைந்து வைக்க
கண்டுகொண்ட தெருநாயாய்
கட்டுகடங்காமல் குலைப்பதற்கு
விதி செய்த விளையட்டாய்
விழுந்து விழுந்து இருமியே
பச்சை தண்ணி எதிரியென்று
பதறியே வெந்நீர் எடுக்க
தும்மலுக்கு துயர் பட்டு
துணிமனியால் வாயடைத்து
தனித்தனியாய் இருந்தாலும்
தரணியெங்கும் இந்நிலையால்
அதிகரிக்கும் அவலநிலைக்கு
அருமருந்தாய் எதுவுமில்லை
தற்காப்பு செய்வதற்கு
தன்கையை சுத்தபடுத்தி
சளி தும்மல் இருமலுக்கு
சட்டென்று துணியெடுத்து
வாயடைத்து வைத்துவிட்டால்
வருமுன் காத்திடலாம்
வருங்காலம் செழித்திடலாம்
தூசி புழுதி புகையை கூட
தூய சூழ்நிலையால் மாற்றியமைத்து
உலக காச நோய் விழிப்புணர்வு இந்நாளில்
உறுதி மொழியை எடுத்துகொள்வோம்


எழுதியவர் : . ' .கவி (25-Mar-11, 8:26 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 494

மேலே