பசுங்கிளியும் பெண்ணல்லவோ

தென்றலைத் தேடி பூங்காற்றில் கலந்து
புயலிடம் சிக்கினேன்
கனவுகள் இன்றி உயர பறக்கும்
பறவையாக இருந்தேன் -பின்
சிறகுகள் முறிக்கப்பட்டு
வார்த்தைகள் பறிக்கப்பட்டு
சுதந்திரம் தடைபட்டு
கிளியாகவே மாறிவிட்டேன்
திருமணம் எனும் அம்பால்
சுதந்திரம் எனும் சிறகொடிக்கபட்டு
வீடு எனும் கூட்டுக்குள் அடைக்கப்படும்
பசுங்கிளியும் பெண்ணல்லவோ !!!!!!!!

எழுதியவர் : பந்தார்விரலி (18-Sep-14, 7:13 pm)
பார்வை : 63

மேலே