வாழ்வின் உயிர்நாடி

விழிகள் கலந்தது விளைந்தது காதல்!
பொழிந்த அன்பில் நனைந்தது இதயம்!
கழியின் தேனாகக் கழியும் நொடிகள்!
பழகிய மனதுள் பொழிலின் பூஞ்செடிகள்!

வற்றாத சீவநதி உணர்வுகளில் பொங்கும்!
குற்றாலக் குளுமை நினைவுகளில் தங்கும்!
வெற்றான சொல்லும் பொருளோடுத் துலங்கும்!
முற்றாக வாழ்வு ஒளி கொண்டு இலங்கும்!

சின்னஞ்சிறு ஊடல் காதலுக்குக் கவின் சேர்க்கும்!
சின்னஞ்சிறு குறும்பு காதலுக்கு எழில் சேர்க்கும்!
சின்னஞ்சிறு பிரிவு காதலுக்கு உரம் சேர்க்கும்!
சின்னஞ்சிறு தியாகமும் காதலை உயர்வாக்கும்!

காதல் வாழும் வாழ்வதனில் வண்ணங்கள் தெளிக்கும்!
காதல் வாழ்வின் தாழ்வினிலும் இனிமைகள் சேர்க்கும்!
காதல் ஏழ்பிறப்பு பந்தம் என்று இதயமது பகரும்!
காதல் பாழ்இறப்பு வந்தபோதும் தான் நிலைத்து வாழும்!

எழுதியவர் : usharanikannabiran (19-Sep-14, 3:48 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 65

மேலே