வேளை
திருமணத்திற்கு பின் வேளைக்கு
போவேன் என்று சொல்லும் மருமகளிடம்
மாமியார் நம்மிடம் என்ன இல்லை என்று
நீ வேளைக்கு போவதாக கூறுகிறாய் என்று
கேட்கும் போது
என் தந்தையிடம் 50 பவன் நகை , 3 லட்சம் ரொக்கம் ,
சீர்வரிசை , திருமண் செலவு கேட்கும் போது
தங்களிடம் என்ன இல்லை என்று ஏன் யோசிக்கவில்லை
என்று கேட்க வாய் வருகிறது வேண்டாம் வந்த 15ஆம் நாளிலே
குடும்பத்தில் சண்டை மூட்டுகிறாள் என்று
பிறர் என் தந்தை வளர்ப்பை பற்றி தவறாக பேச நேரிடும்
என்ற காரணத்தால்
அமைதி கொண்டேன்