அனுபவ அசைவுகள் - இராஜ்குமார்

அனுபவ அசைவுகள்
===================

தொல்லைகளின் எல்லை
தொடுகையில் முல்லை
மலராய் உன்மௌனம்

தோல்விகளின் தொடர்பு
முறிகையில் அடர்வுமிகு
அற்புத அனுபவம்

மறதிகளின் மயக்கம்
வருகையில் தயக்கமில்லா
தாவணி அசைவுகள்

அதிர்வுகளின் சேதம்
நிறைகையில் பாதத்தேடல்
விழிகளின் விருப்பம்

- இராஜ்குமார்

நாள் : 23 - 7 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-Sep-14, 10:33 am)
பார்வை : 128

மேலே