கடிகாரம்

கடிகாரமும் நானும் ஒன்றே
நொடிகளை விரயமாக்கி
வாழ்வின் முடிவினை
தேடிக்கொள்வதால்...

பிறருக்கு காலத்தை
துல்லியமாய் காட்டிக் காட்டி
எனக்கொரு நற்காலத்தை காட்ட யாருமின்றி
என்காலம் முடிந்து போகும் .

ஓய்வின்றி தினம் உழைத்தும்
ஓடும்வரை என் ஞாபகங்கள்
ஓய்ந்து விட்டால் நானும்
ஓடுகிறேன் குப்பைக் கூடைக்குள்

எழுதியவர் : கனகரத்தினம் (22-Sep-14, 12:32 am)
Tanglish : kadikaaram
பார்வை : 208

மேலே