காதல் காகிதம் தான் - இராஜ்குமார்

காதல் காகிதம் தான்
===================

துக்கத்தில் தூங்கியவனை
நினைவுகளால் துரத்தி
உறக்கத்தை உற்சாகப்படுத்தும்
காதல் வெறும் கனவுதான்

தோல்வியால் திரிந்தவனை
தேடலில் புகுத்தி
வெற்றியை பறிக்கவைக்கும்
காதல் ஒரு தோல்விதான்

அன்பிற்காக அலைந்தவனை
புன்னகையால் நிறுத்தி
உள்ளத்தால் உருகவைக்கும்
காதல் ஒரு குருடுதான்

காதலில் நுழைந்தவனை
வெறுப்புகளால் விரட்டி
கவிதையில் குளிக்கவைக்கும்
காதல் ஒரு காகிதம் தான்

- இராஜ்குமார்

நாள் : 15 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Sep-14, 5:02 pm)
பார்வை : 111

மேலே