காதல் கலப்பட இரத்தம் - இராஜ்குமார்

காதல் கலப்பட இரத்தம்
=====================

ஒற்றை குமிழி ஒன்றில்
ஓடி ஓடி குதிக்கிறாய்
குமிழி குதிக்குமிடம்
என் இரத்த நாள தடம்

நொறுங்கும் சத்தம் ஒன்றில்
நெருங்கி நெருங்கி வருகிறாய்
நொறுக்கிய தடயம்
நிறைந்தது என்னிதயம்

சூரிய ஒளி சிதறல் ஒன்றில்
நுழைந்து நுழைந்து சிதைக்கிறாய்
சிதைந்த பாகம்
காண்பதே என் தேகம்

- இராஜ்குமார்

நாள் : 21 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Sep-14, 11:44 pm)
பார்வை : 120

மேலே