விதையாகி போகுது உன் விருப்ப தேடல் - இராஜ்குமார்

நசுக்கும் நரம்பிலும்
தேன்சுரக்கும் நினைவை
எந்த கரத்தின் விரலால்
விரட்டி விட ...

மனதின் கர்வத்தை
கழற்றி பின் சுழற்றி
தூர வீசிய எண்ணத்தை
எந்த வழியில்
எப்படி அழிக்க...

விழியின் உருவத்தை
விழுங்கிய கண்களை
விழும் கண்ணீரில்
வித விதமாய் அழுத்தியும்
விதையாகி போகுது
உன் விருப்பம் தேட ...

- இராஜ்குமார்

நாள் : 15 - 8 - 2014

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (23-Sep-14, 12:15 am)
பார்வை : 146

மேலே