பெண் நிலா-9

'அம்மாவும் அப்பாவும் மும்முரமாக பொண் தேடுவதைப் பார்த்தால் சீக்கிரமே கல்யாணத்தை பண்ணிவச்சுருவாங்க'............ அப்படி எதைஎதையோ சிந்தித்தபடி படுத்திருந்த சத்யன்,


குளித்தால் தேவலை என நினைத்து பாத்ரூமை நோக்கி போக,


அவன் செல் ஒலித்தது,


நின்று திரும்பி செல்லை எடுத்து பார்த்தான், கால் அவன் வீட்டில் இருந்துதான் வந்திருந்தது, அம்மாவாகத்தான் இருக்கும் என நினைத்து ஆன் செய்து காதில் வைத்தான்.


அவன் அம்மா கனகவல்லிதான் பேசினாள்.


“ டேய் சத்யா எங்கடா இருக்க, நீ இன்னும் வீட்டுக்கு வரலையான்னு அப்பா இப்பதான் கேட்டார், நீ எங்க இருக்கப்பா”

“ நான் இங்க நம்ம பட்டறையில தான் இருக்கேன், இன்னிக்கு வீட்டுக்கு வரமுடியாதும்மா, இங்க நிறைய வேலையிருக்கு, நீங்க அப்பாகிட்ட சொல்லிருங்க”

“ அய்யோ என்னால அவர்கிட்ட பேச முடியாதுப்பா, அப்புறம் உன்னாலதான் அவன் கெட்டுப்போய்ட்டான்னு என்னை திட்டிக்கிட்டே இருப்பாரு, நீயே அவரோட செல்லுக்கு போன் பண்ணி சொல்லு, இல்லேன்னா கிளம்பி வீட்டுக்கு வா ”

“ அம்மா என்ன விளையாடுறீங்களா, இங்கே ஒருவாரமா இஞ்ஜின் பெல்ட் அறுந்துபோய், ஏத்தவேண்டிய லோடெல்லாம் அப்படியே கிடக்கு, இன்னிக்கு நைட்டு மரத்தையெல்லாம் அறுத்து லோடு அனுப்பலைன்னா ரொம்ப நஷ்டமாயிரும், இதையெல்லாம் நீ உன் புருஷன்கிட்ட சொல்லி, நான் இன்னிக்கு வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லு அவர் எதுவும் திட்டமாட்டார், எனக்கு நிறைய வேலையிருக்கு இதுக்கு மேல போன் பண்ணாத” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் பதிலை எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான்
சத்யன் பாத்ரூம் போய் குளித்துவிட்டு வருவதற்கும்,


முத்து உணவுகளை வாங்கிவரவும் சரியாக இருந்தது.


“ என்ன முத்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட, கார்ல பறந்து போனியா”

“ இல்லங்கய்யா உங்களுக்கு இன்னிக்கு பட்டறையில வேலை அதிகம், அதான் நீங்க பசியோட இருப்பீங்கன்னு சீக்கிரமா போய்ட்டு வந்தேன்” என்ற முத்து மீதியிருந்த பணத்தை சத்யனிடம் கொடுக்க

“ நீயே வச்சுக்க முத்து, எல்லாத்தையும் எடுத்து டேபிள்ல வச்சுரு நான் இதோ வர்றேன்”

சத்யன் இடுப்பில் இருந்த டவலை உருவிவிட்டு ஒரு கைலியை எடுத்து கட்டிக்கொண்டு டேபிளின் எதிரில் வந்து உட்கார்ந்தான்

முத்து உணவுப் பொட்டலங்களை பிரித்து வைத்துவிட்டு அலமாரியை திறந்து ஒரு கண்ணாடி டம்ளரையும், பிரிஜ்ஜில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலையும் எடுத்துவந்து டேபிள் வைத்துவிட்டு, வாங்கிவந்த மேன்ஷன் ஹவுஸ் பாட்டில் மூடியை லாவகமாக திறந்து அதை கண்ணாடி டம்ளரில் அளவாக ஊற்றி அதனுடன் நிம்பூஸை கலந்து சத்யனிடம் எடுத்துக்கொடுத்தான்

அதை கையில் வாங்கிய சத்யன் “ உனக்கு என்ன வாங்கிட்டு வந்த முத்து, எடுத்துட்டு வாயேன் சேர்ந்தே சாப்பிடலாம்” என்றான்

“ இல்லங்கய்யா நீங்க சாப்பிடுங்க, எனக்கு எப்பவுமே ஓல்ட்மங்க் தான், அதையும் நான் லோடுங்களை பார்த்து அனுப்பிட்டுதான் சாப்பிடுவேன்,”

“ ம் அப்படியே செய் முத்து ” என்ற சத்யன் தன் கையில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளாஸை கீழே வைத்தான்

முத்து மறுபடியும் அந்த டம்ளரில் அளவாக மதுவை ஊற்றி கலந்தபடி “ இந்த அமுதாகிட்ட முட்டை வாங்கிட்டு வந்து குடுத்து ஆம்லேட் போட்டு எடுத்துட்டு சீக்கிரமா வாடின்னு சொன்னேன், இன்னமும் காணோம்” என்று கூறியபடி வாசலை பார்க்க அப்போதுதான் கையில் தட்டுடன் அமுதாவும் உள்ளே வந்தாள்,

அப்போதுதான் தலைக்கு குளித்திருப்பாள் போல, தலைமுடியை பரவலாக படரவிட்டு நுனியில் முடிந்திருந்தாள்,
சத்யன் ஓரப்பார்வையால் அவளையே ரசிப்பதை முத்து பார்த்திருக்க வாய்ப்பில்லை.....

அமுதா தட்டை டேபிள் வைத்துவிட்டு திரும்பி வாசலை நோக்கி போனாள்

“ கொஞ்சம் இரு அமுதா, எனக்கு இதுபோதும் மீதியை எடுத்துட்டு போய் பிள்ளைகளுக்கு குடு” என்று தனக்கு இரண்டு பொட்டலங்களை வைத்துக்கொண்டு மீதியை அமுதாவிடம் எடுத்து கொடுத்தான்
அமுதா முத்துவை பார்க்க, அவன் “ என்னை ஏன் பார்க்கற அதான் அய்யா சொல்றார்ல, எடுத்துட்டு போய் பசங்களுக்கு கொடுத்துட்டு உடனே வந்து அய்யா இப்போ அவுத்துபோட்ட துணி பாத்ரூம்ல இருக்கு அதை அலசிப்போடு அமுதா, நல்ல துணியை அப்படியேவிட்டா வீனாப்போயிரும்” என்று அமுதாவிடம் சொல்ல

“ ஏங்க நீங்க எடுத்துட்டு போய் பசங்களுக்கு குடுங்க நான் பாத்ரூம்ல இருக்கிற சின்னய்யாவோட துணியை சோப் பவுடர்ல ஊறப்போட்டுறேன்” என்று கூறிவிட்டு அமுதா பாத்ரூமுக்குள் நுழைய,

வேறுவழியில்லாமல் முத்து உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

அதன்பிறகு துணிகளை அலசிவிட்டு வெளியே வந்த அமுதா, டேபிளில் அமர்ந்து மறுபடியும் மதுவை ஊற்றி குடித்துக்கொண்டிருந்த சத்யனை நெருங்கி,

"சின்னய்யா நான் கெளம்பறேன், நீங்க நாளைக்கு உங்கம்மாகிட்ட நாங்க அங்கே வர்றதைப் பத்தி கேட்டு சொல்லுங்க" என்று அமுதாகூற"

" ம் சரி அப்படியே நாளைக்கு பசங்களோட பர்த் சர்டிபிகேட்டை எடுத்து முத்துகிட்ட குடுத்தனுப்பு, நாங்க போய் கீழ்க்கடையம் ஸ்கூல்ல விசாரிச்சுட்டு வர்றோம்" என்று சத்யன் கூற அமுதா சரியென்று தலையசைத்துவிட்டு கிளம்பினாள்

தன் வீட்டுக்கு வந்த அமுதா பிள்ளைகள் எங்கே என்று பார்க்க, அவர்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தனர், முத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்,

“என்னங்க நான் வரதுக்குள்ள சாப்பிட்டுட்டீங்க” என்று அமுதா கேட்க,

“ம் இவ்வளவு நேரம் உன்னைதான் எதிர்பார்த்தேன், நீவர நேரமாச்சு அமுதா அதான் நானே போட்டு சாப்பிட்டேன், அதுசரி சின்னய்யா தூங்கிட்டாரா, பாவம் இன்னிக்கு பூராவும் அவருக்கு ரொம்ப வேலை, நல்லா ஓய்வெடுக்கட்டும். நான் போய் லோடுங்களை பார்த்து ஏத்திட்டு வர்றேன், நீ கதவை சாத்திக்கிட்டு தூங்கு அமுதா” என்று கூறிவிட்டு கதவருகே போன முத்து,

மறுபடியும் திரும்பி வந்து "மரத்தை லோடு ஏத்துற வேலை சின்னய்யா என்னை நம்பி ஒப்படச்சிருக்காரு" என்றவன் கதவை திறந்துகொண்டு வெளியே போனான்.


(தொடரும்.....)

எழுதியவர் : (23-Sep-14, 6:02 pm)
பார்வை : 214

மேலே