சொல்லிலா உணர்விலா - இராஜ்குமார்

சொல்லிலா உணர்விலா
======================

என் உதடுகள் என்றும்
உருக்கமாய் சொல்லும்
உரக்கவும் சொல்லும் ..
நான் மாய்ந்துப் போகும்
தருணத்தில் தவறாமல்
உச்சரிப்பேன் உன் பேரை

மூட்டிய காதல் தீயில்
முதுகு பகுதி ஏது ?
முகத்தின் பகுதி ஏது ?
எரியும் தீயில் இவை எதுக்கு ?...

பிரச்சனை ஒன்றின்
பிற்பகுதி இல்லாமல் போனால்
முயற்சிக்கு முடிவில்லாமல் போகும்

பெண்ணே ..
சொற்களின் சோகம்
சொல்லும் சொல்லிலா ?
உணரும் உணர்விலா ?

- இராஜ்குமார்

நாள் : 29 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (23-Sep-14, 11:35 pm)
பார்வை : 90

மேலே