விரட்டி விட்ட காதல் - இராஜ்குமார்

விரட்டி விட்ட காதல்
=====================

அதிகாலை அர்த்தமற்றுப்போக
இலைகள் கிழிந்தாலும்
பச்சையம் அளிக்குது செங்கதிர்

படிகள் பட்டென சரிய
நடுப்படி நுனியில்
நகராமல் நிற்குது நிழல்

வெயிலுக்கு வேடிக்கையாக
மடியில் மடிந்த பனியை
மறவாமல் ஏந்துது புல்

உன்மனதிற்கு மறைவாய்
விரட்டிவிட்ட காதலை
முத்தமிட துடிக்குது எனதுவரி .

- இராஜ்குமார்

நாள் : 27 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (24-Sep-14, 12:16 am)
பார்வை : 135

மேலே