வணங்குகிறேன் நீதிக்கு என்றென்றும்

நீதி வென்றது உன்னால்
காலம் நின்றது உன் பின்னால் ....

நிலை மாறாத நெஞ்சுரம் கொண்ட நீதி மானே
சாமானியனுக்கும் சத்தியத்தின் மீது
நம்பிக்கை அளித்துவிட்டாய்

சட்டம் எல்லோருக்கும் அது கிட்டும் என்று
திட்டவட்டமாக ஊருக்கு உரக்க உரைத்துவிட்டாய்
உன் ஒரு நாள் வார்த்தைகளினால்

சுரமிழந்த சுத்தியலின் சுதி மீட்டியவரே ....

காலத்தை நம்பிய கதியற்றவர்க்கும்
விதி இதுதான் இனிதாக காட்டிவிட்டாய்

படர்ந்துவிட்ட பாவங்களின் வேரறுத்து விட்டாய்
உன் நெஞ்சுரம் கொண்ட நேர்மையினால்

சரித்திரம் நீ படைத்ததில்
பெருமிதம் கொள்கிறது சட்டம்

மனுநீதிசோழனின் மறு உருவாய் நீ
நிலையில்லா உலகில் நீ வாழ்வாய்
வழங்கிய நீதிக்காய்.......

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (27-Sep-14, 3:56 pm)
பார்வை : 77

மேலே