உறவுகளே நன்றி

செப்டம்பர் 24
இளைஞன் யான்
இளம்பிள்ளையாய் உதித்த நாள்…
இன்னரும் நாள்..
இருபத்து ஈராண்டுகளில்
இன்னொரு பொன்னாள்…
இரும்பூது கொண்டேன்..
உவகைப் பொங்கி திரிந்தேன்…
உதட்டில் புன்னகைச் சொறிந்தேன்..
உயர வானில் பறந்தேன்…
அகவை எண்ணை மறந்தேன்…
இன்னல் அருகியதே…
மின்னல் வருடியதே…
கன்னல் கனிந்ததே…
எண்ணம் துணிந்ததே...
உணர்வில் கலந்த
உறவுகளே நன்றி…
நெஞ்சை திருடிய
நிழற்படங்களுக்கு நன்றி…
புன்னகை ஈந்த
புது உறவுகளே நன்றி…
என்னையும் ஏந்திய உம்
கரங்களுக்கு நன்றி…-