இந்த உணர்வு ஏன் - இராஜ்குமார்

இந்த உணர்வு ஏன்
==================

மனம் அணிலாய் அலைந்தும்
தேகம் நிலவாய் தேய்ந்தும்
இந்த உணர்வு ஏன் ?

விரல் சருகாய் காய்ந்தும்
உள்ளம் பனியாய் உறைந்தும்
இந்த பயணம் ஏன் ?

விழி கண்ணீராய் சிதைந்தும்
நாடி நயமாய் நசுங்கியும்
இந்த கனவு ஏன் ?

பார்வை அனலாய் வீசியும்
அவளே முழுதாய் வெறுத்தும்
இந்த காதல் ஏன் ?

- இராஜ்குமார்

நாள் : 31 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (27-Sep-14, 6:12 pm)
பார்வை : 133

மேலே