பால் இயல் வன்கொடுமை
மனுநீதிச்சோழன் காலமாயிருந்தால்
மாடுகள் நீதி கேட்டிருக்கும்!
என் கன்றுக்கான பாலினை
மனிதர்கள் கவருகிறார்கள் என்று!
கன்றின் பாலினை கவர்தலே
ஜீவகாருண்யத்திற்கு எதிராகும்போது
கறந்தப் பாலில் கலப்படம் செய்பவரை
எவர் நீதி செய்வார்?
பால்போதாமல் அழும் தன் குழந்தைக்கு
ஐயமின்றி அளிப்பாளே அந்தப் பாலை
இனியும் கொடுத்தால் இறுதி மாலை
ஊற்றுங்கள் அதையே அவருக்கு இறுதிப்பாலாய்!
ஒற்றை ஆளாய் இதைச் செய்வதிற்கில்லை
காட்டில் நரிகள் இல்லை அவையெல்லாம்
மனித உருவில் ஆங்காங்கே நடமாடுகிறது
அயர்ந்துவிட்டால் கூடயிருந்தே குழி பறிக்கிறது!
கலப்படம் செய்து கிடைக்கும் பணத்தில்
தன்குழந்தைக்கு வாங்கிடும் பால் தன்மையாயிருக்குமோ?
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்!
அகப்பட்ட திருடன் என்றாவது திருந்துவானா?

