என் தேசமே மீண்டும் வருவேன்

..."" என் தேசமே மீண்டு(ம்) வருவேன் ""...

அழும் எம் கண்களும் வரண்டுவிட
வங்கக்கடலின் நீர்வளம் உயர்ந்திட
அது அடித்துச்சென்ற அலைகளால்
அந்நிய தேசத்தின் அனாதைகளாய்
அழைக்கும் ஒருநாள் தாயகமென்று
எம் வறண்ட கண்ணில் குருதியொடு,,

குண்டு மழையினில் தேகம் குளித்து
குருதிகள் தெளித்தே கோலம் போட்டு
கொத்து கொத்தாய் அரும்பு மலர்கள்
மண்ணிலே புதைந்திட்ட விதைகளாக
விருச்சமாய் வளரும் காலம்வரையில்

எம் அன்னையின் தேசமே உன்னை
விட்டும் நாம் பிரியவில்லை உந்தன்
நினைவுகளை விட்டும் தூக்கமில்லை
விடியும்மொரு எங்கள் பொழுதென்று
நெஞ்சில் மணக்கும் உன் மண்வாசம்
எம் குட்டி பொடியனுக்கும் கைமாறும்

அந்த வங்கக்கரை தொட்டு முத்தமிட
சிந்திய செந்நீர் எம் தேகம்பூசி மகிழ
நான் மாண்டு போவதற்குள் மீண்டும்
ஒருமுறை உந்தன் வாசம் சுவாசிக்க
என் ஈழதேசமே மீண்டு(ம்) வருவேன்,,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
முகம்மது சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (28-Sep-14, 1:16 pm)
பார்வை : 159

மேலே