+வெற்றி நம்மை எட்டும்+

இலக்கைத் தேடி பயணம் அமைஞ்சா
வானம் கூட நமக்கு பக்கம்!

இலக்கே இன்றி அலைஞ்சி திரிஞ்சா
மேகம் கூட தூரம் தாங்க!

முயற்சி செய்ய எடுக்கும் முயற்சி
வெற்றி கொடுத்து தட்டி கொடுக்கும்!

முயற்சி இன்றி சோம்பிக் கிடந்தால்
சிறுமுள் கூட பயத்தை கொடுக்கும்!

வைப்போம் அடிகள் முன்னே மட்டும்!
வெற்றித் திருமகள் நம்மை எட்டும்!

திறமை நிச்சயம் ஜெயத்தை காட்டும்!
லட்சிய சிந்தனை பயத்தை ஓட்டும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Sep-14, 9:02 pm)
பார்வை : 1028

மேலே