நீதி வாழட்டும்

இனியாவது......
தட்டப் படும்
சுத்தியலின்
பின்னணியில் என்
குரலும் கேட்கட்டும்.
ஆண்டி... அரசன்
அறிஞன்.... அசடன்
சிறியவன்.... பெரியவன்
வலியவன்... எளியவன்
உயர்ந்தவன்... தாழ்ந்தவன்
எந்தப் பாகு பாடும்
இந்தக் கண்கள்
பார்க்க வேண்டாம்.
குருடாகவே இருக்கட்டும்!
நடப்பவற்றை செவிகள்
இனி உள்வாங்க
இதயம் மட்டும் பேசட்டும்
இதனால்ஒரு
விண்ணப்பம்......
என் கண்கள் இரண்டையும்
இன்னும் இறுகக்
கட்டி விடுங்கள்
இதன் மூலம்
இந்த நீதி
உலகில் என்றும்
உயிர் வாழட்டும்.

எழுதியவர் : சிவநாதன் (29-Sep-14, 5:43 am)
Tanglish : ithayam pesattum
பார்வை : 116

மேலே