தாவணி ஓவியம் - இராஜ்குமார்

தாவணி ஓவியம்
================

நீ நிற்காமல் சென்ற
நொடிகளில் - என்
சரீரம் சட்டென
சரிந்தது ..!!
அந்த ஒற்றைக் கணத்தில்
நீ எனைப் பார்ப்பாய்
என்ற ஆசையில் ..!

அழிந்துப் போன
பாடல் வரிகளை
அலைவரிசையில் ரசித்தேன்
இசையோடு உன் பெயரும்
இணைந்ததால் ..!!

எனது
இரு புருவத்தின்
கற்பனை காவியம்
உனது
முழு உருவத்தின்
தாவணி ஓவியம் ..!!

- இராஜ்குமார்

நாள் : 15 - 9 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Sep-14, 8:57 am)
பார்வை : 116

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே