விசித்திர வெட்கமானாய் - இராஜ்குமார்

விசித்திர வெட்கமானாய்
=========================

நான் தவறை திருத்திய
தருணங்களில் தவறாமல்
முன்னிலை பொருளானாய் ..!

ஆடம்பரம் விலக்க
அன்பின் அடையாளத்தில்
அடிக்கடி அழகானாய் ..!

உன்னுருவம் பார்க்கா
திணறும் நொடிகளில்
திரட்டும் நினைவானாய் ,,!

தோல்வியென துரத்தும்
முட்களின் முகத்தில்
விசித்திர வெட்கமானாய் ..!

- இராஜ்குமார்

நாள் : 12 - 20 -2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Sep-14, 6:04 pm)
பார்வை : 99

மேலே