விருப்பத்தின் விசைகள் - இராஜ்குமார்

விருப்பத்தின் விசைகள்
=======================

சலவை கல்லில்
பதிந்த என்பாதம் - உன்
இல்லம் நோக்கியே நடக்குது ..!!

வெறுத்தப் பொழுதினில்
என்விரல் நகம் - உன்
முகம் காட்டும் கண்ணாடியானது .!

நீளும் பயணத்தோடு
ஓடும் என்னிதயம் - உன்
நிறுத்தத்தில் மட்டுமே நிற்குது ..!!

விருப்பத்தின் விசைகளில்
விரைவாகும் என்தேடல் - உன்
காதலின்றியே ஒருபுள்ளியில் புதையுது ..!!

- இராஜ்குமார்

நாள் : 14 - 10 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Sep-14, 6:40 pm)
பார்வை : 145

மேலே