நானுமில்லா ஆழ்ந்த மனதில் - இராஜ்குமார்

நானுமில்லா ஆழ்ந்த மனதில்
============================

மின்சாரமில்லா இருண்ட தெருவில்
தேவதை தேடும் பாதம்
கலங்கரைவிலக்கமில்லா தூர துறையில்
அழகுதீவை தேடும் பயணம்

அழுகையில்லா நித்திரை இரவில்
நினைவுகள் தேடும் உறக்கம்
அடையாளமில்லா காயத்தின் வடுவில்
வலிகள் தேடும் தேகம்

உணர்வில்லா கவிதை வரியில்
காதல் தேடும் விழிகள்
நானுமில்லா ஆழ்ந்த மனதில்
உன்னை தேடும் மொழிகள்

- இராஜ்குமார்

நாள் : 29 - 11- 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (30-Sep-14, 6:36 pm)
பார்வை : 106

மேலே