மணக்கும் மனம்

அயரா துழைத்தும் அரைவயி றுண்போர்
துயர்போக்கத் துணியார் துடிப்பு. – செயல்வீரர்
தானென்றுக் காட்டத் தினசரி ஊடகத்தே
நாணம் இழந்த நடிப்பு.
தமிழன் விடும்மூச்சுத் தன்மூச்சுத் தானென்று
உமிழ்ந்தாட்சிக் கைப்பற்றி உய்தே - அமிலம்
தெளிப்போரைத் தெய்வம் எனநம்பி என்றும்
வழிபாடு செய்தல் தவிர்.
துடிக்கத் துடிக்க அறுத்து உரித்து
படிப்படியாய் வெட்டி அரிந்து – இடித்தப்
பலசரக் கிட்டு சமைக்க மணக்கும்
அலறுகின்ற ஆட்டின் மனம்.
*மெய்யன் நடராஜ்