இயற்கை விரும்பும் காதல் ஜோடிகள்

கலங்கமற்ற இரவு வானில்
ஒரு வெள்ளை வீடு
அர்த்தராத்திரியில் பூமிக்கு
பாதை திறக்கிறது
பாதை வழியே இரண்டு காதல்
ஜோடிகள் கைக் கோர்த்து
பூமிக்கு வருகின்றனர்

அவன் புல்லாங்குழல் இசைக்க
இவள் தாளம் போட்டு ஆடுகிறாள்
அவள் கால் படும் இடங்கள்
வெள்ளைப் பூவென் பூக்கிறது
இயற்கை அதிசயித்து நிற்கிறது

ஆடி முடிந்து இருவரும்
ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து
காதல் மொழி பேசுகின்றனர்
குரலின் இனிமை கேட்டு
இயற்கை மெய் மறந்து போகிறது

பேசி முடிந்து இருவரும்
வந்த வழியே செல்கின்றனர்
பாதை மூடிக் கொள்கிறது
இயற்கை ஏக்கத்துடன் நிற்கிறது

எழுதியவர் : fasrina (1-Oct-14, 9:15 am)
பார்வை : 74

மேலே