சாதி கொடியதடா

ஒன்றாய் இருந்திடுவோம்-மனம்
....இன்றே திருந்திடுவோம்
கொன்றே ஒழித்திடுவோம்- ஏழ்மை
....நின்று கொளுத்திடுவோம்

பகைமை மறந்திடுவோம்-பகுத்
....தறிவைத் திறந்திடுவோம்
சுகமாய் வளர்ந்திவோம்-ஈகை
....சுருக்கா இரந்திடுவோம்

சாதி கொடியதடா-நம்மை
....சாய்க்கும் வெடியதடா
ஆதி மனிதனிலே-அது
....அறவே இலையறிடா!

எழுதியவர் : அபி (1-Oct-14, 3:55 pm)
பார்வை : 138

மேலே