சோழா சோழா

சோழா...... சோழா அன்று நீ விதைத்த
செந்நெல்லும் நீரின்றிப் பாழாய் !
சோழா...... சோழா அன்று நீ உரைத்த
வென்னாற்றுத தமிழ்வீரம் பாழாய் !
சோழா........ சோழா அன்று நீ வார்த்த
செப்புச்சிலை மெருகின்றிப் பாழாய் !
சோழா......... சோழா அன்று நீ வடித்த
கட்டிடக்கலை வளர்ப்பின்றி பாழாய் !
சோழா....... சோழா அன்று நீ வளர்த்த
தமிழ்மொழி பேசதிறன் இன்று பாழாய்!
சோழா...... சோழா அன்று நீ வணங்கிய
காவிரி தடுத்து விளைவளம் பாழாய் !
சோழா..........சோழா அன்று நீ தொடுத்த
கடல்போர் இன்றுபுலம் பெயரப் பாழாய்!
சோழா.......... சோழா அன்று நீ எடுத்த
உடல்நலக் காப்புமுறை இன்று பாழாய் !
சோழா............சோழா அன்று நீ ஊட்டிய
எம்மதம் சம்மதநீதி இன்று பாழாய்!
சோழா.............சோழா அன்று நீ காட்டிய
ஓவிய,சிற்ப,இசைக்கலை இன்று பாழாய்
சோழா........... சோழா அன்று நீ காட்டிய
விவசாய, நீர் முறைகள் இன்று பாழாய்!
சோழா........... சோழா அன்று நீ நிறுத்திய
பொருளாதார, சட்ட,கலை இன்று பாழாய் !
சோழா........... சோழா அன்று நீ தூண்டிய
மூவேந்தர் தமிழ் இனம் இன்று பாழாய் !

எழுதியவர் : சந்திரசேகரன் சுப்பிரமணிய (2-Oct-14, 11:12 am)
சேர்த்தது : Chandrasekaran Subramaniam
பார்வை : 226

மேலே