பெண்மை

(என் கல்லூரித் தமிழாசிரியை பற்றி...... அவர் feel பண்ணி அழுத கவிதை....)அதிகாலை நான்கு மணி
அவசரமாய் விளக்கிய
அழகுப் பல் வரிசை
அடுப்பில் அழுது வடிந்தேவிட்டது
அன்றைய அன்னம்
அதிவேகமாய் இறக்கி வடித்த போது தான் நினைவிற்குவந்தது
அதில் உப்பே போடவில்லை
என்று....!

காலை ஆறுமணி ஆனபின்பும்-இறப்பின்
கவலையில் உயிரோடு இருக்கின்றது
கத்தரியும் வெங்காயமும்!
'அம்மா பால்' வாசலில் பால்காரனின் அழைப்பு
'அம்மா சோறு' இரு செல்வங்களின் சிணுங்கல்
'ஏஞ்சல் என்னோட வண்டிச் சாவி' துணைவரின் தேடல்...

சூடற்றியின் சுடு நீர்ச் சுகம்
பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்
காலை உணவை உண்ண மறந்து!

கல்லூரிப் பணிக் களைகட்ட
கோலாகலமாகக்
கற்பித்தேன் புதிய தலைமுறைக்கு.
தோழியரின் தோழமை,
துவளாது உழைக்கும்
துறைத் தலைவரின் வேண்டுகோள்கள்,
அமைதியானப் புத்தகச் சாலை,
அழகுக் கண்மணிகளின்
அதரப் புன்னகை என
அவசரமாகப் புறப்பட்டேன் மணி நான்கு...

மாமியாரின் அன்பான சேவை,
ஒரு தம்ளர் தேநீர்,
ஒரு வழியாய் முடித்தேன்
இரவு உணவை.

கல்லூரிப் பணிகள் தொடர்ந்தன
கற்பாறை போல் சுமையாய் வீட்டிலும்.
இரு செல்வங்களும் அழைத்தனர்
'அம்மா வா விளையாடலாம்' என்று,

உடல்வலி ஒருபுறம் இருக்க
உள்ள வலி உருக்க
உடைந்தே போனேன்
இதுதானா பெண்மை என்றெண்ணி!!!

எழுதியவர் : பபியோலா (2-Oct-14, 12:57 pm)
Tanglish : penmai
பார்வை : 2167

மேலே