காதலின் இதழோ - இராஜ்குமார்

காதலின் இதழோ ?
====================

இன்னலை அழிக்கும்
இனிய குணமே காதலோ ?
உச்சரிப்பில் உள்ளம்
உரசும் உவகையே காதலோ ?

வாய்ப்பில்லா வாழ்த்தில்
வயதை குறைப்பதே காதலோ ?
நிமிராமல் சிகரத்தை
நிழலில் தொடுவதே காதலோ ?

உடலிலிணையா உயிரை
அசைக்க நினைப்பதே காதலோ ?
இமையிழந்த கலையை
இருட்டிலும் கொடுப்பதே காதலோ ?

இறுக்கப்பட்ட இதயமும்
சுவடாக துடிப்பதே காதலோ ?
மக்கிப்போன மாளிகையின்
மண்ணை திருடுவதே காதலோ ?

- இராஜ்குமார்

நாள் : 03 - 01 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-Oct-14, 3:25 pm)
பார்வை : 77

மேலே