விழியற்ற காதல் - இராஜ்குமார்

விழியற்ற காதல்
===============

உறவும் நட்பும்
கைகுலுக்கா நிலையில்
உதவி உடனே
உறங்க செல்லுது

கனவு முழுக்க
கழட்டி வைத்தும்
காதல் எந்தன்
கைககளை கட்டுது

இரவின் உச்சியில்
விழிகளை பிடுங்கி
விரைவாய் வீசினேன்
பள்ளத்தை பார்த்தே

வீசிய விழிகள்
விரும்பி தேடுது
உன்னழகு உருவத்தை
குருடானதை மறந்து ..

கவலையின் காலடியில்
கற்பூரம் கொளுத்தி
காதல் சொன்னேன்
ஆண்டவன் அழிந்தும்

- இராஜ்குமார்

நாள் : 03 - 01 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-Oct-14, 4:01 pm)
பார்வை : 104

மேலே