கவியில் காணும் காதலா - இராஜ்குமார்

கவியில் காணும் காதலா
=========================

கைவசமில்லா எண்ணமொன்று
இரக்கமின்றி எனைமென்று
அடிக்கடி அன்பை அழித்தே
ஆசை முடிக்கிறது

கிட்டத்தட்ட தட்டுபடா
தருணத்தின் தலைகளும்
தண்டனையால் எனை
தவறாமல் துரத்துது ...

ஆரம்பம் பெறாத
தொடக்கமெல்லாம் இறுதி
தேடலில் இன்றே முடிந்து
அசதியில் மூழ்குது

கண்ணீர் துளியின் காரணம்
கவியில் காணும் காதலா ..?

- இராஜ்குமார்

நாள் : 10 - 05 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (3-Oct-14, 10:18 am)
பார்வை : 136

மேலே