உனது விருப்பமாய் விடைபெறுவேன் - இராஜ்குமார்

உனது விருப்பமாய் விடைபெறுவேன்
===================================

வெளியேறிய நேரத்தில்
புறப்படும் ஆசைகள்
வருடங்களை வருடினாலும்
தகுதியை மட்டும் தாலாட்டும்

இன்றியமையா இடத்தில்
ஒதுக்கப்பட்ட விருப்பம்
மறவாத அனுபவத்தின்
நீட்சிப்பெற்ற நிகழ்வாகும்

போர்வைக்குள் புதைத்த
எனது கனவுகளின்
கடைசி காட்சி - உனது
விருப்பமாய் விடைபெறும்

- இராஜ்குமார்

நாள் : 12 - 05 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (3-Oct-14, 10:36 am)
பார்வை : 147

மேலே