இரவையும் காதலிக்கிறேன் உன் நினைவாய்

என்னவனே...

உன் நினைவில் விழித்திருக்கும்
இரவையும் காதலிக்கிறேன்...

நிலவினை ரசித்தபடியே....
உன் நினைவுகளுடன் பேசிக்கொண்டு...

உறங்கிய இரவுகளை விட
என் விழிகள் விழித்திருக்கும் இரவுகளே அறியும் ...
உன் மீது நான் கொண்ட காதலை...

இரவு முழுவதும் விழித்திருப்பேன்
உன்னிடம் பேசும் அழகிய
நிமிடங்களுக்காக ஒவ்வொரு நொடியும்...

எழுதியவர் : சகிமுதல்பூ (3-Oct-14, 11:30 am)
பார்வை : 261

மேலே