ஆயுத பூஜை
குண்டூசி முதல் எங்களின் வாழ்வுடன் இயைந்து
கண்டுணர்ந்த நல்ல நல்ல பொருளுக்கெல்லாம்
காரணமாய் விளங்கும் கருவிகளுக்கு எல்லாம்
காலம் காலமாய் எங்களின் நன்றியுணர்வை காட்ட
ஞாலம் முழுதும் என்னென்ன வழிகளை பின்பற்றி
எப்படி எப்படி செய்கிறார்களோ எனக்கு தெரியாது
ஆனால் எங்களின் நாட்டில் எங்களுக்கு தெரிந்த வழி
அவற்றை சுத்தபடுத்தி சந்தனம் குங்குமம் சேர்த்து
புஷ்பம் மாலை சாத்தி பொறி அவல் பழங்களுடன்
எங்கள் அன்பையும் அபிமானத்தையும் காட்டுகிறோம்
எங்களை சார்ந்து எங்களின் அன்றாட வாழ்வுடன்
சேர்ந்து எங்களின் வாழ்வு தரத்தையும் உயர்த்தும்
எங்களின் வாகனங்களுக்கு புரியுமோ புரியாமல் போகுமோ
அவற்றின் பால் எங்களின் அன்பும் கரிசனமும் இருந்தும்
வருடம் தோறும் துர்கா பூஜை காலம் எங்களின் வாழ்வில்
ஆயுத பூஜை ஆரவாரத்துடன் அட்டகாசமாய் அரங்கேறும்