நீ யாரென்பதை அறிவாயா

மண்ணில் புரண்டு தவழ்ந்தவனை
கரம்பிடித்து உயரம் நோக்கி
ஓட வைத்த திறமை நீ

மீசை முறுக்கி அவனை
ஆணென உணர்த்தி உலகிற்கே
சொன்ன உன்னதம் நீ

மண் ஒட்டவில்லை என்னும்
சாதிக்கா உனது இந்த சலனம்

நெஞ்சை நிமிர்த்தி பாரடி
அவன் திமிரறுந்து தலைகுனியட்டும்

விரல் நீட்டி காட்டடி
அவன் கதியற்று கலங்கட்டும்

அவன் செய்தது அவமானம் அல்ல
நீ கண்ணீரை வடித்த நாட்களே
தோல்வியை ஒற்று கொண்டு
அவமானப்பட்ட நாட்களென எழுதி வை

விழிகளை துடைத்திடு
சுவடெல்லாம் வீரம் விதைத்திடு
சூரியனையும் புருவம் கொண்டு செதுக்கிடு

கோமாளியென சொல்லி வளர்த்திடு
கோழையாய் பெண்ணை துன்பம்
துரத்திட செய்வானெனில்

நீ தீயாய் எரிந்திட
தூண்டுகோள் வேண்டுமோ

உனக்கா இல்லை தைரியம்
மூடி மறைக்காதே பெண்ணே
பூட்டி வைக்காதே உள்ளே

சேலை கிழிந்தாலும்
முள்ளை உடைத்திடு
கண்ணாடி விரிசலடைந்தாலும்
கல்லை உருகுலைத்திடு

வீரம் ஊட்டினால் போதாது
உன் வீரத்தையும் காட்டு
அடங்கி உட்காரட்டும்
வீரமும் உன் கால்
சுண்டு விரலென......

எழுதியவர் : மணிமேகலை (4-Oct-14, 2:10 pm)
பார்வை : 354

மேலே