இளநீர்
ஏ சி அறையினில்
ஏகாந்தமாய் நாளும்
பேசி சுகம் கண்டு
அதிகாரம் செய்பவர்
கர்வம் அழிந்திடும்
தூசி போல் இளநீர்
கைதனில் எடுத்து
வீசி அதன் தலை சீவும்
திறமை கொண்ட
கிழவியம்மா தனைப் பார்த்தால் !
பேரம் பேசிடாமல்
கேட்ட பணம் தந்திடுவேன்
அவர் படும் பாட்டைஎண்ணி!