பொம்மைகொலு

பெண்ணே உன்
பெண்மைக்கு உயிர்க் கொடுத்தார்களோ - இல்லை பேசும்
பொம்மைக்கு உயிர்க் கொடுத்தார்களோ
பெண்ணே - என்வீட்டு
பொம்மைக் கொலுவில் பொம்மைகள்
கலையிழந்துக் காட்சித்தருகிறது. - ஓ
உன்னையும் அழைத்ததால் தானோ
உயிரில்லாப் பொம்மைகள் உன்னிடம்
உயிர்க் கேட்டு கலையிழந்துக் காண்கிறதோ.

என்வீட்டு அழகுக்கு விதவிதமான
பொம்மைகளை அடுக்கி அழகுப் பார்த்தேன்.
பொம்மைகளின் அழகில் என்வீடு
பொலிவுப் பெற்றது. - தசரா பண்டிகைக்காக
பத்து வீட்டுப் பெண்களை அழைத்தோம்.
நீயும் வந்ததால் - என்வீட்டு பொம்மைகள்
நாணம் கொண்டு கோணலாகி போனது.

வந்தவர்கள் பேசா பொம்மைகளின்
வரிசை அழகை ரசிக்காமல் - உன்
வசந்த மேனியை ரசித்தார்களே.
வெட்கம் பொம்மைக்கா? இல்லை எனக்கா?

வந்தாலும் வந்தாயடி - என்வீட்டு
வாலிபனை வயப்படுத்தி
வாழத்தான் வருவாயடி. - வரவா
நான் உன் வீட்டுக்கு. - உன்னை
என்வீட்டில் அழகுப் பார்த்து ரசிக்க.

வீடுதேடி வந்த பெண்ணுக்கெல்லாம்
வெற்றிலைப்பாக்குடன் மஞ்சளும்
குங்குமமும் தந்தேனடி. - உனக்கும்
குங்குமமும் தருகின்றேனடி.- என்
குலம் விளங்க நீயே விளக்காய் வருவாயடி

பொம்மைக் கொலுவில் - இந்த
பேசும் பொம்மையின் பெண்மையைப்
போற்றி, பேரானந்தம் தருவாயடி.-இந்த
பொம்மைகொலு உனக்கும் வழி சொல்லுமோடி

(இந்தக் கவிதை ஒரு பெண் மற்றொரு அழகுப் பெண்ணைப்
பார்த்து தன் மனதிற்குள் விசும்பும் பிரதிபலிப்பு.)

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (5-Oct-14, 8:07 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 75

மேலே