முக நக நட்பதே நட்பு

முகபுத்தக நண்பர் அழைப்பு
யார் அது ??? நமக்கு யார் அழைப்பு விடுத்தது ??
என்ற நினைப்பில் நான் ..
திறந்து பார்த்தேன் .... அச்சோ !
பள்ளி தோழி !! மனதோரம் பூரிப்பு

பள்ளியில் வைத்து அவளவாக
பேசியது இல்லை ...
அவள் உதடு பேசுவதை விட விழிகளே அதிகம் பேசும்..

சரி நண்பர் விடுகையை ஏற்று கொள்வோம்.. என்று
ஏற்று கொண்டேன் ... Good eve என ஆங்கிலத்தில் ஒரு
குறுந்தகவலை அனுப்பினேன் ... மறு பதில் வந்தது ..

அப்படியே எங்கள் விரல் சொடுகைகள் மூலம்
பேச்சு விரிவடைந்தது ... பழைய நினைவுகள்
அதிகம் பரிமாறப்பட்டது ...

நடப்பு நிகழ்வுகளும் பரிமாறப்பட்டது ..
தூக்கம் தொலைத்து அரட்டை அதிகமானது ...
mobile எண் மட்டும் தர மறுத்து விட்டாள்..
பரவா இல்லை முக புத்தக அரட்டையே போதும்
என்று மனதை தேற்றி கொண்டேன் ...

அந்த நாளும் வந்தது ...
நண்பன் ஒருவனின் திருமண விழா ..
அவள் தான் வருவதாக முக புத்தகத்தில் செய்தி
அனுப்பவில்லை ...
ஆனாலும் அங்கு வந்து இருந்தாள்..
நான் போய் அவளிடம் பேசினேன்..
அவள் பெரிதாக ஒன்றும் பேசவில்லை ..

இந்த பெண்களே இப்படிதான் என நினைத்து கொண்டேன்
இருந்தாலும் விடவில்லை அவளிடம் போய்
படிப்பு எப்படி போகுது என்றேன் ...
அவளோ நான் படித்து முடித்து ஒரு வருடம் ஆச்சு
என்றாள்... அடிபாவி என மனதில் நினைத்து கொண்டு
நீ படிபதாக சொன்னாயே என்றேன் ..
அவள் நான் எப்படா சொன்னேன் ?? என்று
வினா எழுப்பினாள்...???

நான் திரு திரு வென முழித்த படியே அவள் அனுப்பிய
குறுஞ்செய்திகளை காண்பித்தேன் ...
அவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள்..
தொலைவில் நண்பன் ஒருவன் சிரித்தபடி நின்றான்..
புரிந்து கொண்டேன் FAKE ID என்று ...

எழுதியவர் : ஆ ஜா ஆரன் காஸ்ட்ரோ (5-Oct-14, 9:35 pm)
பார்வை : 142

மேலே