காஷ்மீர்

பற்றியெரிகிறது எங்கள் (பனிப்பிர )தேசம்
பக்கத்து நாடு போடுகிறது ரெட்டை வேஷம்
அண்டை நாடு இன்றும் சண்டை நாடாக
சமாதான கொடிகள் சவப்பெட்டி போக
அவிழ்த்து விடப்படும் அத்துமீறல்கள் உறைபனிக் குளிரில் உறையாத சடலங்கள்
அப்பாவி மக்களின் ஒப்பாரிகள்
கண்ணிவெடிகளுக்கு நடுவே கனவு காணும் காஷ்மீரிகள் ...
இத்தனைக்குப் பிறகும்
போரை நாங்கள் புறந்தள்ளுகிறோம்
குற்றுயிராய் இன்னமும் அகிம்சை எங்களோடு .....

எழுதியவர் : பா.ராஜா , B .உடையூர் (7-Oct-14, 9:55 pm)
சேர்த்தது : p.raja b.udaiyur
பார்வை : 71

மேலே