நல்லவை நாட
வார்த்தைக்கு வார்த்தை பேசாதே
ஏட்டிக்கு போட்டியாக வாளாதே
உள்ளொன்று புறமொன்று கூறாதே
விட்டுக்கொடுக்க மறுக்காதே
ஆசைக்கு அடிமை ஆகாதே
அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லாதே
கூன் என்றும் முடம் என்றும் பழிக்காதே
உயர்ந்தவன் தாழ்ந்தவன் எண்ணாதே
ஆபத்தில் உதவ மறக்காதே
ஆலயம் செல்ல தவறாதே
நண்பனை நம்ப மறுக்காதே
நான் என்ற இறுமாப்பு கொள்ளாதே