முத்தறை
முத்தறை
சம்மதங்களின் நிராகரிப்பில்
சமத்துவச் சண்டையிடும்
உன் உதடுகள்
களைத்துப் போனதால்
முத்தத் தாகம் எடுத்துவிட்டதை
உன் கண்கள் காட்டிவிட்டது
பேச்சுப் பரிமாறலின் உச்சம்
எச்சில் பரிமாற்றம் என்பதை
சொல்லித் தந்தவளே நீதானே
இணைத்துக் கொடுக்கும் இலவசம் போல
அனைத்துக் கொடுப்பதே பரவசம்
முத்தக் கொடுப்பு மொத்தக் கெடுப்பென்று
கடுப்பேற்றிச் சென்றவன் யார்?
செவ்விதழ் கவ்வுதல் போல காதலில்
உன்னதம் என்னதும் உண்டா
கன்னத்தில் முத்திரை போல யாரும்
முத்தறை பெற்றதுண்டா?